விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விடூர் புது காலனி பகுதியில் அருண்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுலிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், 1 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடன் வாங்கியவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்யும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி நிதி நிறுவனத்தின் மேலாளர் கடன் பெற்றவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்ய வேண்டும் என அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.

இதனால் மனமடைந்த அருண்குமார் அன்று மாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவருடைய மனைவி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் தன் கணவரின் மரணத்திற்கு காரணமான நிதி நிறுவனத்தின் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.