தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் பகுதியில் அனுஷ்வர்யா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் மகேஷ் குமார் (33) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பேராவூரணி பகுதியில் ஒரு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்திற்கு அனுஷ்வர்யா கடன் கேட்டு சென்றுள்ளார். அப்போது மகேஷ் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த இரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரிய வரவே பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். அதன்பிறகு இவர்கள் இருவரும் வேடசந்தூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். அங்கு இருதரப்பு பெற்றோரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் வாலிபரின் பெற்றோர் அவர்களை அழைத்து செல்வதாக கூறினர். அதன் பிறகு பெண்ணின் பெற்றோர் தங்களுக்கும் தங்கள் மகளுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்கு நாங்கள் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டோம் எனக் கூறிவிட்டு எழுதிக் கொடுத்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.