
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விபின் கடன் பிரச்சனையால் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார்.
இதனால் அவர் வீட்டை விட்டு ரூ.18 லட்சம் பணத்தை தன்னுடைய மனைவியிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்ற நிஷா திடீரென மாயமானார். அவர் வீட்டில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.18 லட்சம் பணம் போன்றவற்றை எடுத்து சென்றுள்ளார். மேலும் இது தொடர்பாக விபின் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.