
கடன் தொல்லை காரணமாக சொந்த குழந்தையை தந்தையே வேறு ஒருவருக்கு விற்ற சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் கொடிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா இவருக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கடன் தொல்லை காரணமாக இவரது கணவர் பக்கத்து வீட்டு பெண்ணுடன் சேர்ந்து குழந்தையை வேறு ஒருவருக்கு விற்றதாக தெரிகிறது.
இதனால் மணமுடைந்த பவித்ரா குழந்தையை மீட்டு தரக் கோரி தனது கணவருடன் தொடர்ந்து முறையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பவித்ரா நடந்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.