
கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் நடந்த ஒரு சம்பவம் மக்களை உலுக்கியுள்ளது.
ஸ்ரீனிவாஸ் என்ற நபர், அவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா ஆகியோர் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர்.
பின்னர் அவர்களது உடல்கள் கால்வாயில் மிதந்தது கொண்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் அவர்களை கண்டதும் கதறி அழுத நிலையில், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீனிவாஸ் கடனால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. கார் ஓட்டுநரான அவர், கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.