லூசியானா கடற்பகுதியில் கடந்த வாரம் ஒரு அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின் நீந்தி சென்றுள்ளது. நபர் ஒருவர் கடந்த வாரம் பழைய ரிவர் பாசில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மெக்சிகோ வளைகுடாவிற்கு அருகே கேமரூன் பாரிஸில் இரண்டு பிங்க் டால்ஃபின்களை பார்த்ததாக அவர் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், அல்பினோ டால்ஃபீன்கள் மரபணு மாற்றத்தை கொண்டிருப்பதால் அவற்றின் தோல் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்று விளக்கம் அளித்தார்.

மேலும் ப்ளூ வேல்ர்ட் இன்ஸ்டியூட் கூறுகையில், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இதுவரை 20 அல்லது அதற்கு மேற்பட்ட காட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது ஒரு மிகவும் அரிதான காட்சி எனவும் கூறியுள்ளது. பொதுவாகவே இந்த வகை டாப்பின்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.