சென்னை துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக கடற்படை அதிகாரி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் கார் ஓட்டுநர் முஹம்மத் சஹி கடலில் மூழ்கி மாயமானார். அவரைத் தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு முஹம்மத் சஹி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.