தமிழர்களின் பாரம்பரிய நடனங்களில் பரதநாட்டியமும் ஒன்று. இது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் புகழ் பெற்று விழங்கும் நிலையில் தற்போது நாடு கடந்து சீனாவில் கால்பதித்துள்ளது. அதாவது சீனா நாட்டில் லீ முசி (13) என்ற சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடமாக ஜின் ஷான் என்ற நடன கலைஞரிடம் பரதம் கற்றுள்ளார். ஜீன் ஷான் என்பவர் 1999-ல் டெல்லியில் தனது பரத கலையை அரங்கேற்றம் செய்தார்.

அதன் பின் தேர்ச்சி பெற்ற லீ முசி, பரதநாட்டிய கலைஞர் லீலா சாம்சன்,  இந்திய தூதர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்பு வரலாற்று சிறப்புமிக்க பாடல்களுக்கு 2 மணி நேரத்திற்கு அரங்கேற்றம் செய்தார். அதாவது பரதம் கற்கும் ஒருவர், தேர்ச்சி பெற்ற பின்பு ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும்.

அதன் பின்னரே அவர்கள் தனியாக நடனம் ஆடவும், பயிற்சி அளிக்கவும் முடியும்.  இதுகுறித்து இந்திய தூதரக கலாச்சார பொறுப்பாளர் டி.எஸ்.விவேகானந்த் கூறியதாவது, இதுவே முதல்முறை.  சீனாவில் முழுமையாக பரதநாட்டிய கலையை பயற்சி பெற்று அரங்கேற்றம் செய்வது. மேலும் இந்த மாதம் இறுதியில்  அவர் சென்னையில் நடனமாட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.