
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலப்பநாயக்கன் பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினர் பாலமேட்டில் இருக்கும் உறவினர்களை பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கோமணம் பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கார் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.