சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இன்று தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடுபட்ட நிலையில் உடனடியாக உதயநிதி ஸ்டாலின் அதனை தடுத்து நிறுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடும்படி அறிவுறுத்தினார். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது. முன்னதாக டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து தவறாக ஒலிபரப்பப்பட்ட நிலையில் ஆளுநரை உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் கடுமையாக விமர்சித்தனர். தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த குற்றத்திற்காக ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறினார். இதன் காரணமாக தற்போது துணை முதல்வர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டும் எனவும் பாஜக கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழக பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா இந்த சம்பவத்திற்கு கட்டணம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நீங்கள் எரிகின்ற பந்து அதே வேகத்தில் உங்களை வந்து அடிக்கும். ஆளுநர் பங்கேற்ற விழாவில் நடந்த அந்த பிழையை வைத்து பிரிவினைவாத சக்திகள் அரசியல் செய்ய பார்த்தார்கள். ஆனால் உள்ளபடியே ஆண்டவன் இருக்கிறான் என்பது நிருபனமாகிவிட்டது என்றார். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு வானதி சீனிவாசன், எல் முருகன், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.