
சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை வரை பிரபலமானவர்தான் நடிகர் மதுரை முத்து. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றார். இவருடைய காமெடிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடி ஜோக்கை சொல்லிவிட்டு அதனை சமாளிப்பதற்கு இவர் சொல்லக்கூடிய நகைச்சுவை தான் அல்டிமேட் ஆக இருக்கும். நகைச்சுவையில் கொடி கட்டி பறக்கும் கலைஞர்களில் ஒருவரான மதுரை முத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு பத்தாவது சீசனில் நடுவராக உள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “நமக்கு மேல உள்ளவனை பார்த்து நாம எப்போதுமே பொறாமை பட்டால் நாம வாழவே முடியாது. நமக்கு கீழே இருக்கவனை பாக்கணும். காலுக்கு நல்ல செருப்பு இல்லையேன்னு கவலை படக்கூடாது. காலே இல்லாதவனை பாருங்க அவன் என்ன பண்ணுவான். கடவுள் நம்மளை ரொம்ப சோதிக்கிறான் என்று சொல்றவங்க ஒருமுறை கவர்மெண்ட் ஹாஸ்பிடல் போய் பாருங்க அங்க எவ்வளவு நோயாளிகள் இருக்காங்கன்னு. அவங்களை பார்க்கும்போது நமக்கு இருக்குற பிரச்சினை ஒண்ணுமே இல்ல” என்று கூறியுள்ளார்.