வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி அமெரிக்கா மற்றும் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடுகளை பதற்றமடைய செய்து வருகின்றது. இவ்வாறான போர் பதற்றங்கள் மற்றும் உலக நாடுகளின் தலைமைபடுத்துதல் போன்ற சிக்கலில் இருக்கும் வடகொரியாவிற்கு கொரோனா தொற்று பேரடியாக அமைந்தது. அதன் பின் அந்நாட்டில் கடுமையான உணவு மற்றும் தானிய தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

ஆனால் பஞ்சம் என்ற அபாய நிலையை இன்னும் வடகொரியா தள்ளப்படவில்லை. இந்த நிலையில் சரியான வேளாண் கொள்கையை அமைப்பது குறித்து வடகொரிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த உணவு தானிய தட்டுப்பாட்டை அந்நாடு சரியாக கையாளாமல் போனால் அதிபர் கிங் ஜாங் உன்னில் அணு ஆயுதத் திட்டங்களுக்கு மக்கள் ஆதரவை இழக்க நேரிடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.