பத்து அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடர் ஆனது இந்தியாவின் தலைநகரங்களில் நடந்து வருகிறது.  இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஆடி வருகிறது. பஞ்சாப் அணி இதுவரை மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை கண்டுள்ளது. தற்போது ஐபிஎல் தொடரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.  இதுவரை மூன்று போட்டிகளில் 159 ரன்கள் அடித்துள்ளார். இரண்டு அரை சதங்களும் இதில் அடங்கும். இந்த நிலையில் ஸ்ரேயாஸ்  ஐயரிடம் கடைசியாக எப்போது அழுதீர்கள்? என்று தொகுப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவர், “கடைசியாக நான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் நாள் பயிற்சி செய்யும்போது அழுதேன்.   அப்பொழுது நிறைய அழுதேன். ஏனெனில் வலை பயிற்சி செய்தபோது எனக்கு எதுவுமே சரியாக சொல்லவில்லை. அதனால் என் மீது கோபம் அடைந்து நான் அழுதேன். சொல்லப்போனால் நான் எளிதாக அழ கூடியவன் கிடையாது. அதையும் தாண்டி அழுதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.