
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் டெல்லியில் இருந்து நேபாளத்தில் காத்மாண்டுவிற்கு கூகுள் மேப் உதவியுடன் சைக்கிளில் பயணம் செய்தனர். அப்போது வழி தவறி அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலிக்கு சென்றனர். அதன் பிறகு வழி தெரியாமல் இரண்டு சுற்றுலா பயணிகளும் அதிகாலை நேரம் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தனர்.
இதனை பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களை போலீஸிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் வந்து விசாரணை நடத்திய போது இருவரும் வழித்தவறி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சரியான வழி கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.