அமெரிக்க நாட்டில் உள்ள ஃப்ளோரிடோ மாகாணத்தில் வோலுசியா என்ற நகர் உள்ளது. இங்கு கிம்பர்லி ஷாப்பர் என்ற 52 வயது பெண் வசித்து வருகிறார். இவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகிறார். இந்த கடையில் மனித எலும்புக்கூடுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தியதில் அது உண்மை என்று தெரியவந்தது.

இந்த கடையில் நடத்தப்பட்ட சோதனையில் மனித மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள், முதுகெலும்பு உள்ளிட்டவைகள் இருப்பது தெரியவந்தது. பச்சை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த பெண்ணையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு அந்த எலும்பு கூடுகள் அந்த பெண்ணுக்கு எங்கிருந்து கிடைத்தது என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.