
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அய்யாசாமி காலனி பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நகர செயலாளர் செல்வகுமார்(40) மாற்றுத்திறனாளிகளுடன் தகராறு செய்துள்ளார்.
அந்த பகுதியில் இறைச்சி கடை இருப்பதால் சாலையில் அப்பகுதியில் செல்லும் போது நாய் துரத்துவதாக கூறி செல்வகுமார் தகராறு செய்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளியை கல்லால் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.