
சிவகங்கை அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை விந்தியா பேசும் போது, “சரத்குமார் பாஜகவுடன் கட்சியை இணைத்ததை பார்க்கும் பொழுது கட்சியை நான் வச்சிக்கிறேன், விருதுநகர் தொகுதியை வேணா நீங்க வச்சுக்கோங்க” என்ற வடிவேலு காமெடியை நினைவுபடுத்துவதாக இருந்தது.
மேலும் கட்சியின் இணைப்பு விழாவிற்கு சரத்குமார் மற்றும் ராதிகா மட்டும் வர, அண்ணாமலை அவர்களைப் பார்த்து இரண்டு பேர் மட்டும் வந்து இருக்கீங்க? என்று கேட்டதற்கு, நானும் ராதிகாவும் மட்டும்தான் கட்சியில் இருக்கிறோம்” என சரத்குமார் சொன்னதாக கலாய்த்து தள்ளினார்.