தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கின்றதா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.