இன்று காலை சென்னை சென்ட்ரலிலிருந்து நந்தனம் செல்ல மெட்ரோ ரயிலில் கட்டுமான கூலி தொழிலாளர்கள் எற முயன்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து நபர் ஒருவர் புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு மெட்ரோ நிர்வாகம் இதற்கு பதிலளித்துள்ளது.

அதாவது, தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காரணம் அவர்கள் கையில் கூர்மையான பொருட்களை வைத்திருந்ததால்தான். மெட்ரோவில் கூர்மையான பொருட்களுக்கு அனுமதி இல்லை. அதன்பின்னர் கூர்மையான பொருட்களை மறைத்து வைத்து அவர்களை பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது என கூறியுள்ளது.