
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் ‘ஆத்தா உன் கோயிலிலே’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படி பல படங்களில் நடித்து வந்த இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஆனால் சில வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இவர் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து எதாவது கருத்துக்களை கூறுவது வழக்கம்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார் . பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் மூன்று மொழிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டுத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சினை கிடையாது. மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என்று சொன்னால் பிறப்பாடங்களை எப்படி பழக முடியும். கணக்கு கஷ்டம் என்றால் அதை பாடத்திலிருந்து நீக்கிவிட முடியுமா? இலகுவான முறையில் மாற்றியமைக்கலாமே தவிர கற்காமல் விட முடியாது” என்று பேசியுள்ளார்.