உத்திரபிரதேசம் மாநிலம் மெயின்புரியில் வசிக்கும் சோட்டு என்பவர் வேலைக்குச் செல்லாமல் திருட்டு தொழில் செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி தகராறு ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு கணவரிடம் அஞ்சலி சமோசா வாங்கி வர சொல்லி உள்ளார்.

சமோசா உடன் கணவர் வீடு திரும்பிய போது அஞ்சலி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்தை தாங்க முடியாத சோட்டு குடும்பத்தினருக்கு போன் செய்து கூறிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.