நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.  குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்.  இவரது இரண்டாவது மனைவி பாலசுப்பிரமணியம் என்கிற பாலாஜி என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்தார்.

இது குறித்து அறிந்த ரமேஷ் இருவரையும் கண்டித்ததால் இருவரும் ஆத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் பாலாஜிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததால் அவர் தனது மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தான் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை கொலை செய்த பாலாஜி அவரது சடலத்தை எரித்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பாலாஜியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.