
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் குறிச்சி கிராமத்தில் தீனதயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்த நிலையில் தன்னுடைய அக்கா மகனுக்கு தீனதயாளன் தன் மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திவ்யா தன் கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திவ்யா அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்க்கும் நிலையில் பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் அதே பகுதியில் ஒரு வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்வ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.