
உத்திரபிரதேச மாநிலத்தில் பிரஞ்சல் சுக்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மீஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில வருடங்களில் மீஷா தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய சகோதரர்கள் இருவர் மீது வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்துவதாக புகார் கொடுத்தார். அதோடு தன்னை ஆபாச படங்கள் பார்க்குமாறு வற்புறுத்துவதாகவும் இயற்கைக்கு மாறான உடலுறவு வைக்க தன் கணவர் வற்புறுத்துவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
அதோடு தன்னை தனியாக தவிக்கவிட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டதாக மீஷா கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை அலகாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணையின் போது பிரிஞ்சல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தவில்லை எனவும் திருமணத்தின்போது கூட அவர் அந்த மாதிரி வரதட்சணை எதுவும் வாங்கவில்லை எனவும் தெரிய வந்தது.
அதோடு மீஷா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததும் தெரிய வந்தது. பின்னர் கோர்ட் கணவன் மனைவிக்கு இடையா படி என்னதான் பிரச்சனை என்று விசாரித்த போது தான் உண்மைகள் தெரிய வந்தது. அதாவது அவர்களுக்கு தாம்பத்திய உறவில் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது தன் கணவருடன் ஆன உடலுறவுக்கு மீஷா தொடர்ந்து மறுத்துள்ளார்.
இதன் காரணமாக வழக்கை விசாரித்த நீதிபதி அனீஸ் குமார் குப்தா வரதட்சணை வழக்கை ரத்து செய்தார். அதன் பிறகு வழக்கை விசாரித்த நீதிபதி கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் பிரச்சினைகள் ஏற்பட்டதும் தன் கணவருடன் ஆன தாம்பத்திய உறவுக்கு மீஷா மறுத்ததுமே பிரச்சினைக்கு காரணம் என்று கூறினார். மேலும் ஒழுக்கமான நாகரிக சமூகத்தில் ஒரு கணவர் தன் மனைவியை விட்டுவிட்டு இல்லற இன்பத்திற்கு வேறு எங்கு செல்ல முடியும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.