சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் திருமணமான 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் 23 வயதான ஆட்டோ ஓட்டுனர் முகமது ரபீக் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக பழகி உள்ளனர். தினமும் அந்த பெண் தனது கணவர் குடிக்கும் பாலில் தூக்க மருந்து கலந்து கொடுத்து விடுவார். அவர் ஆழ்ந்து தூங்கிய பிறகு முகமது ரபீக்கை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் தனிமையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் முகமது ரபீக்கிற்கு அந்த பெண்ணின் 17 வயது மகள் மீது ஆசை வந்தது. அப்போது 17 வயது மகளை தனக்கும், 16 வயது மகளை தனது நண்பன் அப்துல் கலாமிற்கும் விருந்தாக்கினால் நிறைய பணம் தருவதாக தனது கள்ளக்காதலியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தாயின் சம்பந்தத்துடன் முகமது ரபீக்கும், அவரது நண்பரும் அந்த பெண்ணின் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் மகள்கள் தங்களது தந்தையிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமிகளின் தாய் முகமது ரஃபீக், அப்துல் கலாம் ஆகிய மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.