கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கௌதம் மற்றும் நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கவுதம் பெங்களூரில் சலூன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது பணிக்கு கிளம்பும்போது அவரிடம் தனது சாக்லேட் வாங்கித் தரும்படி அவரின் மனைவி நந்தினி கூறியுள்ளார். ஆனால் அதற்கு கௌதம் வாங்கி தர முடியாது என கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

இதனால் கோபமடைந்த நந்தினி வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீடு திரும்பிய கௌதம் தனது மனைவியை கண்டு அதிர்ச்சி அடைந்து உயிர் இருக்கவே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் நந்தினி கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.