கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் மற்றும் மகளைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அனிதாவுக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மோகன்ராஜ் அனிதாவும் இணைந்து அந்த குழந்தையை சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 2 லட்ச ரூபாய் பணத்திற்காக விற்பனை செய்தனர்.

இதனையடுத்து அந்த குழந்தை கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சைல்ட் லைன் பிரிவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானது. இதனால் அனிதா, மோகன்ராஜ், அவர்களுக்கு உடந்தையாக இருந்த ரஞ்சிதா, சுஜாதா, தேவி, சோபா, லில்லி ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.