
மேற்குவங்கத்தில் புதிய சாலையை திறந்து வைக்க சென்ற முன்னாள் பாஜக எம்.பி. திலீப் கோஷ், உள்ளூர் பெண்களுடன் நடந்த வாக்குவாதத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது அவரிடம் வாக்குவாதம் செய்த பெண்கள், “நீங்கள் எம்.பி.யாக இருந்தபோது எங்களை ஒரு முறையாவது பார்த்தீர்களா? இப்போ சாலை கட்டி முடிச்ச பிறகு மட்டும் வருகிறீர்கள்” என்று கேள்வியெழுப்பினர். இது திலீப் கோஷுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அவர் சாலை தன்னுடைய எம்.பி. நிதியில் இருந்து கட்டப்பட்டதாகவும், அது திரிணாமுல் கவுன்சிலரின் நிதியிலிருந்து காட்டவில்லை என்றும் கூறினார்.
இதற்கிடையில், ஒரு பெண் “எங்கள் அப்பாவை ஏன் இழுக்குறீங்க?” எனக் கேள்வியெழுப்ப, திலீப் கோஷ் மேலும் கோபமடைந்து, “உன்னுடைய பதினான்கு தலைமுறையையும் பற்றியும் பேசுவேன். கத்தாதே. உன் கழுத்தை நெரித்துவிடுவேன்” என மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தொடர்ந்து, “நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, என் நிதியில் இந்த சாலை பணம் வந்தது. நீங்க திரிணாமுல் நாய்கள்” எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பெண்கள் மீது, மிரட்டல் அளவில் நடந்துகொண்ட திலீப் கோஷின் செயல் குறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, பலர் திலீப் கோஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
ছিঃ! একজন মহিলাকে বিজেপি নেতা দিলীপ ঘোষ কিভাবে হুমকি দিচ্ছে, শুনে নিন! বিজেপির থেকে এর বেশি আর কিই বা আশা করা যায়? ধিক্কার বিজেপিকে!#ShameOnBJP #DilipGhosh #bjpwestbangal pic.twitter.com/JdGL4guhJc
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) March 21, 2025