
சென்னையைச் சேர்ந்த ரவுடி ரோகித் ராஜ் என்பவர் பிரபல ரவுடிகளான சிவகுமார், தீச்சட்டி முருகன் மற்றும் ஆறுமுகம் கொலை வழக்கில் குற்றவாளி ஆவார். அது மட்டுமல்லாமல் ரோகித் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன. இந்த நிலையில் தலைமை காவலர் சரவணகுமார் மற்றும் காவலர் பிரதீப் ஆகியோரை ரோகித் இன்று கத்தியால் வெட்டியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய ரோகித்தை பெண் எஸ்ஐ கலைச்செல்வி என்பவர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.