நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்தி நாயகன் பாளையம் உள்ளது. இங்கு சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் (29) என்ற மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பல வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு சரியாகி உள்ளார். இருப்பினும் கடந்த 3 மாதங்களாக பைக் வாங்குவதில் ஏற்பட்ட தகறாறால் மீண்டும் அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாததோடு வீட்டில் தனியாக ஒரு அறையில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

இவர் வேலை பார்க்கும்போது ஒரு வருடத்திற்கு 70 லட்ச ரூபாய் சம்பளம் பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவ நாளில் பக்கத்து  வீட்டில் ‌ சில ‌ குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சோபாவில் தஸ்மிதா (10) என்ற குழந்தை உட்கார்ந்து இருந்தது. இந்த சிறுமி பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர். இந்த சிறுமியை திடீரென செந்தில்குமார் தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தில் வெட்டியுள்ளார். இதனால் சிறுமி அலரி துடித்த நிலையில் அவரை தடுப்பதற்காக முத்துவேல் மற்றும் தங்கராசு ஆகியோர் ஓடி வந்துள்ளனர். இவர்களையும் அவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்..