
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சென்று கிருஷ்ணா நகரில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜேசிபி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஷாலினி. இந்த நிலையில் சேதுராமன் வேலைக்கு சென்ற பிறகு ஷாலினி வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் வீட்டு கதவை தட்டியதால் ஷாலினி கதவை திறந்து பார்த்தார். அப்போது போதையில் வந்த வட மாநில வாலிபர் ஷாலினியை ஆக்ரோஷமாக துரத்த முயன்றார். இதனால் ஷாலினி அச்சத்தில் கூச்சலிட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த வட மாநில வாலிபரை பிடித்து அருகில் இருக்கும் மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை நடத்தியதில் அந்த நபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தாவூத் துடு என்பது தெரியவந்தது. அவர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கொள்ளையடிக்க முயற்சி செய்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.