
கனடாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூட்டோ தன்னுடைய பிரதமர் பதவியை கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்த நிலையில் அதன் பின் புதிய பிரதமராக மார்க் கர்னி பதவி ஏற்றார். இதற்கிடையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்பின் வரிவிதிப்பு மற்றும் உள்நாட்டு அரசியல் பிரச்சனை போன்ற பிரச்சினைகள் எழுந்தது. இதனால்தான் ஜஸ்டின் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கடந்த 28-ம் தேதி கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் மீண்டும் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் மார்க் கர்னி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் அவருக்கு தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து சொல்லியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கனடாவின் பிரதமராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கும் உங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இருநாட்டின் மக்கள் உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.