
கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட பகுதியில் ஓரிரு இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை இருக்கும் பட்சத்தில் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 16ந் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.