தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழைநீர் ஆனது தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.