பாகிஸ்தானிய கனடிய பத்திரிக்கையாளர் தரேக் ஃபதா என்பவர்  புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் நேற்று காலமானார்.அவரின் மகள் நடாஷா ஃபதா அவரது மறைவு செய்தியை பகிர்ந்து கொண்டார். 1987-இல் கனடாவுக்கு குடிபெயர்வதற்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த ஃபதா, கனடாவிலும் வெளிநாட்டிலும் ஒரு விருது பெற்ற நிருபர், கட்டுரையாளர் மற்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சி வர்ணனையாளர் ஆவார்.

ஃபதா ஒரு அரசியல் ஆர்வலராகவும், மனித உரிமைகளின் பாதுகாவலர் மற்றும் மத வெறியை எந்த வடிவத்திலும் கடுமையாக எதிர்ப்பவராகவும் விளங்கி வந்ததாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன. தற்போது தரேக் ஃபதா மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.