
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ தற்போது ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி செய்யும் நிலையில் கடந்த 9 வருடங்களாக ஜஸ்டின் பிரதமராக இருக்கும் நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கிறது.
இந்த நிலையில் திடீரென அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில் இடைக்கால பிரதமர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் கன்னட பிரதமர் தொடர்ந்து மோதல் போக்கே கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் அவருடைய அறிவிப்பு உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.