தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து தைரியமாக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் சின்மயி தற்போது தனது பக்கத்தில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது Blinkit CEO நேற்று முன்தினம் இரவில் மட்டும் 1.2 லட்சம் காண்டம் விநியோகம் செய்யப்பட்டதாக பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு நேற்று முன்தினம் இரவில் மட்டும் இ-காமர்ஸ் களங்கள் மூலமாக ஒரு கோடி ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்த தலைமுறையில் கன்னிப் பெண்களை திருமணம் செய்து கொள்வது அதிர்ஷ்டம் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

இதனால்தான் சின்மயி காட்டமான பதிவை வெளியிட்டார். அந்த பதிவில், ஆண்கள் பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு மட்டும் கன்னிப்பெண்கள் வேண்டும் என்று கூறுகிறார்கள். முதலில் ஆண்கள் பெண்களுடன் திருமணத்திற்கு முன்பாக உடலுறவு கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதோடு உங்களுடைய ஆண் நண்பர்கள் மற்றும் சகோதரர்களிடம் திருமணம் முடியும் வரை உடலுறவு கொள்ள வேண்டாம் என்று கூறுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.