
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடிய 16 வயது ஐடிஐ மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த அரசு ஐடிஐ மாணவரான பிரதாப் என்பவர் கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோதே எதிரணியினர் மடக்கிப்பிடித்த போது தலைக்குப் குப்பிற விழுந்ததில் அவருடைய தலையின் பின்புறம் பலத்த அடி ஏற்பட்டது.
உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.