
கமல்ஹாசனின் அரசியல் பாதை தன்னை ஏமாற்றம் அடைய செய்து விட்டது என்று நடிகை கஸ்தூரி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் நடவடிக்கைகளை பார்த்தால் திமுகவின் மைய கிளையாகவே மாறிவிட்டது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. சினிமா தயாரிப்பாளர் கமலுக்கு உள்ள கட்டாயங்கள் அரசியல் தலைவர் கமலின் சுதந்திரத்தில் கைவைத்துவிட்டன என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.