கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. மக்களும் ஆர்வமாக வாக்களித்தனர். இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (சனிக்கிழமை) வெளியாகின்றன. அடுத்த ஆண்டு முதல் பாதியில் புதிய மத்திய அரசு அமையும். நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு மாநில கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. கர்நாடாகாவில் பாஜகவும், காங்கிரஸும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

அம்மாநிலத்தில் எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற கருத்துக்கணிப்பால், கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன. காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் எதிர்காலம் என்ன என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.