
கர்நாடக மாநிலம் ஹவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த ஒரு வேனில் , பெலகாவி மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
வேனில் சென்ற மேலும் 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் வேன் முற்றிலும் நொறுங்கியதால் உடல்கள் நசுங்கின. சடலங்களை மீட்க தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சிரமப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.