
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் சுபாஷ்(22). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். அப்போது சுபாஷுக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சுபாஷ் அந்த சிறுமியை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி இரவு வீட்டார் சம்பந்தத்துடன் சுபாஷ் சிறுமியை திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இதுகுறித்து குழந்தைகள் உதவி எண் 1098-க்கு ரகசியமாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் நலதுறை அதிகாரிகளும், பாபநாசம் அனைத்து மகளிர் போலீசாரும் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக சுபாஷை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் சுபாஷின் தந்தை ராஜேந்திரன், தாய் சுமதி, சிறுமியின் தாய் தந்தை ஆகியோர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.