இந்தியாவில் ஏழை எளிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மாத்ருத்வா வந்தன் யோஜனா. இந்த திட்டத்தின் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தாலும் பல பெண்களுக்கு இது பற்றி தெரியாமல் உள்ளனர். இந்த திட்டம் 19 வயதிற்கு மேற்பட்ட திருமணமான பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கர்ப்பிணி பெண்கள் https://pmmvy.wcd.gov.in/என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்தால் அவர்களது வங்கி கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்.