ஆந்திர மாநிலத்தில் கோழி கறிக்கடைக்காரர் ஒருவர் கடைக்கு அருகே சத்தமிட்டு கொண்டிருக்கும் காகங்களை பயமுறுத்துவதற்காக ஒரு காகத்தை பிடித்து கால்களை கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டப்பட்ட அந்த காகத்தின் துயரமான அலற சத்தத்தை கேட்டு நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த இடத்தில் கூடி பெருமளவில் சத்தத்தை எழுப்பி உள்ளது.

இந்த சத்தத்தை தாங்க முடியாமல் அந்த பகுதியில் உள்ள மற்ற கோழி கடைக்காரர்கள் கோழிக்கடைக்காரரிடம் காகத்தை விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன் பிறகு அவர் காகத்தின் காலில் கட்டி இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.