மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் (24) ஒருவர் வசித்து வருகிறார். இவர்  தனது தோழியை கிண்டல் செய்வதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனிஷ் என்ற பெயரில் போலியான அக்கவுண்டை ஓப்பன் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த போலியான அக்கவுண்ட் மூலம் அவரது தோழியிடம் மனிஷ் என்ற பெயரில் பேசியுள்ளார். ஆனால் அந்தப் பெண் மனிஷ் மீது காதல் வயப்பட்டத்தோடு,  அவரை நேரில் காண விரும்பியுள்ளார். அப்போது அப்பெண்ணின் தோழி மற்றொரு போலியான அக்கவுண்ட்டை “சிவம் பாட்டீல்” என்ற பெயரில் ஓபன் செய்துள்ளார்.

அந்த போலியான அக்கவுண்டில் இருந்து நான் தான் மனிஷின் அப்பா என்று கூறினார். பின் அவள் காதலித்த மனிஷ் தற்கொலை செய்து கொண்டார் என்றார். இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் கடந்த மாதம் 12ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் உள்ள மெசேஜ்களை பார்த்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் புகாரின் படி காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் இறப்பிற்கு காரணமான அவளது தோழியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.