உத்தர பிரதேஷ் மாநிலம் ஹத்ராஸில் திருமண கொண்டாட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின் போது மணமகன் சிவம் நடனமாடும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் நடனமாடி கொண்டிருந்த மணமகன் அந்த காணொளியில் ஓரிடத்தில் சென்று அமர்கிறார். அதன் பிறகு நடந்தது தான் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நன்றாக சந்தோஷமாக நடனமாடிக் கொண்டிருந்த சிவம் சிறிது நேரத்திலேயே தரையில் மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிவத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

https://x.com/SachinGuptaUP/status/1858484305913090142