திண்டுக்கல் மாவட்டம் ஆலந்தூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவியும் காளீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளனர். இதை பார்த்த அருகிலிருந்த காவலர்கள் அங்கு சென்று அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அதன்பின் காவல்துறையினர் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் முத்துச்சாமியின் நிலத்தை அவரது உறவினர்கள் கைப்பற்ற முயன்றுள்ளனர். இதனால் அவர் கன்னிவாடி காவல் நிலையத்திற்கு சென்று பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் அது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் அவ்வாறு செய்தோம் என அவர்கள் கூறியுள்ளார். மேலும் அவர்களது மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.