சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தயாராகி வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் வசதி அமைக்கப்பட உள்ளது. சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் 25 கோடி செலவில் பூங்கா அமைக்கும் பணிகள் ஆனது நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு 2.79 கோடி செலவில் ரோப் கார் வசதி அமைக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் 2.37 கோடி ரூபாய் செலவில் பறவைகள் வீடு அமைக்கவும் தோட்டக்கலை சார்பாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.