இயக்குனர்கள் நெல்சன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ஜெயிலர் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிசியாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் வேகமாக முடிந்து வருகிறது. இதை அடுத்து தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.

ஏழு நாட்கள் மட்டுமே கால் சீட் கொடுத்திருக்கும் ரஜினிக்கு இப்படத்தில் நடிக்க 25 லட்சம் சம்பளம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்-ஐ  திருமணம் செய்து 42 ஆண்டுகள் ஆகிறது. காதல் மனைவியுடன் நேற்று திருமண நாளை கொண்டாடிய ரஜினிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் வாழ்த்துக்களை குவித்தனர்.