சென்னையில் உள்ள திருமங்கலம் பகுதியில் கார்த்திகேயன் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்தி (27) என்ற பெண்ணுடன் திருமணமானது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக அவர்கள் மருத்துவமனையில் சென்று சிகிச்சை மேற்கொண்ட நிலையில் எந்த பலனும் அளிக்கவில்லை. இதன் காரணமாக சாந்தி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதனால்  அவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட நிலையில் அதற்காக ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மாத்திரைகள் சாப்பிடலாம்.

இதில் சாந்தியின் தாய் கடந்த ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் இது மேலும் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சாந்தி தன் தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.